பல விருதுகளை வென்ற ”கள்வா” குறும்படம் யூடியூப் சேனலில் வெளியாகிறது!

பல விருதுகளை வென்ற ”கள்வா” குறும்படம் யூடியூப் சேனலில் வெளியாகிறது!

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதையான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ஜூன் 22ம்…
Read More
சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் 3 விருதுகளை பெற்ற ‘கள்வா’ குறும்படம்

சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் 3 விருதுகளை பெற்ற ‘கள்வா’ குறும்படம்

மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது. பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது. மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது. இதேபோல் மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷனிலும் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. மேலும் பல…
Read More