06
Mar
“சுழல் - வோர்டெக்ஸ்” சீரிஸ் தமிழில் திரில்லர் சீரிஸ்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது. இந்த சீரிஸின் இரண்டு சீசன்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போட்டுள்ளது. ஒரு திரில்லராக மட்டுமால்லாமல், கலாசார நுட்பங்களுடன் கூடிய தனித்துவமான கதையையும், மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதில் சிறப்பு மிக்க தொடராக பாராட்டுக்களைக் குவித்துள்ளது. முதல் சீசன் மாயனக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்த திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா, இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. சுழல்: வோர்டெக்ஸ் S2 கதையின் பரிமாணங்களை அடுக்குக்கடுக்க வெளிப்படுத்துகிறது, குறிப்பாக திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும்…