அகத்தியா படத்திற்காக உருவான கேம் ஆப் !!

அகத்தியா படத்திற்காக உருவான கேம் ஆப் !!

தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் கூறியதாவது.., “இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை…
Read More
ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா” !!

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா” !!

  டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா". "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு…
Read More
ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

  கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.   பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது. பாலசுப்ரமணியின் மனதிற்குள் உருவான இந்த தனித்துவமான கதைக்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் அற்புதமான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சாம்…
Read More
நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை!”அறம் செய்” பட விழாவில் இயக்குனர் வைத்தியநாதன்!

நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை!”அறம் செய்” பட விழாவில் இயக்குனர் வைத்தியநாதன்!

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது "அறம் செய்". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இந்நிகழ்வினில் நடிகர் ஜீவா பேசியதாவது, பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார்.…
Read More
ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி

  ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா?…
Read More
“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

  Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் புதிய திரைப்படம் “கோல்மால்”. முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இன்று 10.10.2021 காலை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் RB சௌத்திரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், உட்பட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. பின்னர் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வில் *கிரியேட்டிவ் புரடியூசர் நரேஷ் ஜெயின் பேசியதாவது…* இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாங்கள் ஆரம்பித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம். இயக்குநர்…
Read More