12
Jan
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, ZEE5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE5 தளத்தில், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்யும், இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் வீரம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உணர்த்துகிறது. இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை, நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம், ZEE5 இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது, அதே…