இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் டூ!

இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் டூ!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியானப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. வடிவேலு டபுள் ஆக்‌ஷனில் கலக்க, மனோரமா, நாசர், இளவரசு, தேஜ ஶ்ரீ, மோனிக்கா, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி படத்துக்கு இசையமைத்திருந்தனர். மெய்யாலுமே மெஹா ஹிட் அடித்த இந்தப் படம் வடிவேலுவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வடிவேலு முழு நேர ஹீரோ அவதாரம் எடுத்தார். தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில், இம்சை அரசனுக்கு இன்றளவும் தனி இடம் உண்டு. இந்நிலையில், வடிவேலு நடிக்கவுள்ள 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக உடல் இளைக்க முடிவு செய்துள்ளார் வடிவேலு. 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார். லைகா நிறுவனம்…
Read More