16
Oct
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'hi நான்னா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும். பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின்…
