03
Aug
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க…
