கழுவேத்தி மூர்க்கன் படம் பார்த்த திரு. தொல். திருமாவளவன்! இயக்குனருக்கு பேட்டி!

கழுவேத்தி மூர்க்கன் படம் பார்த்த திரு. தொல். திருமாவளவன்! இயக்குனருக்கு பேட்டி!

இயக்குனர் கௌதம்ராஜின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழுவேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கிறது, யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. இன்றைய இளைஞர்கள் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நுட்பமாக இதன் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதியை கடந்து நட்பு உருவாக வேண்டும் அது வலுவாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் நண்பர்களாக வரும் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வழிகாட்டுவதாக ஜனநாயகத்தை கற்பிப்பதாக இருக்கிறது, சாதிகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல்கள்…
Read More