ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

இயக்குனர் - ஜோஷ்வா சேதுராமன் நடிகர்கள் - லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா இசை - கோவிந்த் வசந்தா தயாரிப்பு - கோமளா ஹரி பிக்சர்ஸ் - கோமளா ஹரி , ஹரி பாஸ்கரன் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் முழுக்க பெண்களை மையமாக வைத்து வந்திருக்கும் படம். ஒரு மலையாள பட சாயல் அதிகமாக தெரிந்தாலும், படம் முழுக்க ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறது இந்த ஜெண்டில்வுமன்.   சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதியர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் அப்பெண் எதிர்பாராமல் கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர்,…
Read More