சினிமா பி.ஆர்.ஓ. சங்கம் நடத்திய முப்பெரும் விழா!

சினிமா பி.ஆர்.ஓ. சங்கம் நடத்திய முப்பெரும் விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து,…
Read More
சினிமா பி ஆர் ஓ-க்கள் இணைந்து நடத்தப் போகும் முப்பெரும் விழா!

சினிமா பி ஆர் ஓ-க்கள் இணைந்து நடத்தப் போகும் முப்பெரும் விழா!

ஒரு சின்ன பிளாஷ்பேக்.. 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்  .ஒரு தகவல் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆர் எம் வீ அலுவலகம் போன போது அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. அந்நாளில் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம் அந்த விஷயம் தெரிந்த நிலையிலும்  நான் ”ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன்.  உடனே “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும்   அந்த ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன.  இதைக் கண்ட எம்.ஜி.ஆர். வாய் விட்டு பாராட்டினார். தற்போது தமிழ் சினிமாவில்  தனி ஆவர்த்தனம் செய்யும்   P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு…
Read More