விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தைச் சொல்லும் ‘பூமி’!

விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தைச் சொல்லும் ‘பூமி’!

மூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials-ன்  முதல் தமிழ் தொடரான ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளி யிட்டது. மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது. ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள “பூமி” திரைப்படம், விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது. படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியது….. “பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம். இயக்குனர் லக்‌ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத் தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை…
Read More
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘  குத்தூசி’

இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘ குத்தூசி’

ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியுள்ள படம்"குத்தூசி". வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கியகதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால்இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும்படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும்என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது. நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்புவிவசாயம்தான் என உலகநாடுகள் அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும்எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாகிவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார்இயக்குனர் சிவசக்தி. இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை பகுதி மற்றும் சென்னையில்மொத்தம் 54 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். காதல், ஆக்‌ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையாக குத்தூசிஉருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இயக்குனர் - சிவசக்தி இசை – N.கண்ணன் ஒளிப்பதிவு - பாஹி பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை எடிட்டிங் – J.V மணிகண்ட பாலாஜி கலை - ஸ்ரீஜெய் கல்யாண் வசனம் - வீருசரண் சண்டைகாட்சிகள் - ராஜசேகர் நடனம் - ராதிகா, சங்கர் இணை தயாரிப்பாளர் - த.கணேஷ் ராஜா
Read More
‘நானும் ஒரு விவசாயி’ : கின்னஸ் சாதனைக்காக களமிறங்கிய ஆரி

‘நானும் ஒரு விவசாயி’ : கின்னஸ் சாதனைக்காக களமிறங்கிய ஆரி

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் - நல்லநிலம் என்ற ஊரில்  நடைபெற்றது . இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது.  இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார். மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அத்துடன் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர் . இந்த நிகழ்வு சீனா நடத்திய கின்னஸ் சாதனையானா 2017 பேரை கொண்டு நடத்திய சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்றும் ட்ரான்ஸ்…
Read More