18
Sep
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பின்னர் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டி ருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது,…
