‘நீ சுடத்தான் வந்தியா’ பட பாடல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்!

‘நீ சுடத்தான் வந்தியா’ பட பாடல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்!

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும் போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி…
Read More
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' .காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர். அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன. 'டிக் டாக் இலக்கியா'வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது "டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு .படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு. ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. சில நாட்களில் நான்…
Read More