விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.  இவர்  நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும்…
Read More