துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 'தோளி பிரேமா', 'சார்/வாத்தி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை எழுதி, இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்…
Read More
‘சீதா ராமம்’ படத்திற்கு மெல்ஃபெர்னில் சர்வதேச விருது ! மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

‘சீதா ராமம்’ படத்திற்கு மெல்ஃபெர்னில் சர்வதேச விருது ! மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

  துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர்- ஹனுராகவ புடி - ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான 'சீதா ராமம்'  படத்திற்கு மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து அழகான காவிய காதல் கதையான 'சீதா ராமம்' எனும் திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை உலக அளவில் பெற்றது. ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்ஃபெர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா சிறப்பாக…
Read More