துல்கர் சல்மானின், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது!

துல்கர் சல்மானின், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது!

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான "ஐ அம் கேம்" படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப் படக்குழுவினர் கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர். தமிழின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஆணட்னி வர்கீஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் பிளாக்பஸ்டர் “RDX” படத்தைத் தந்த நஹாஸ் ஹிதாயத் இயக்குவது இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில்,…
Read More
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ போஸ்டர் வெளியீடு !!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ போஸ்டர் வெளியீடு !!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. 'பெங்களூர் டேய்ஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ காதல் கண்மணி', 'மகாநடி', 'குரூப்' மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது. 'ஹண்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் 'காந்தா' படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில்…
Read More
இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை சீதாராமம் : துல்கர் சல்மான் பேச்சு

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை சீதாராமம் : துல்கர் சல்மான் பேச்சு

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் 'சீதா ராமம்' பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர். இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தில் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் லைகா தமிழ் குமரன் பேசுகையில், '' சீதாராமம் படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த பட குழுவினருக்கு லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின்…
Read More