எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை தில் ராஜா பட விழாவில் கே ராஜன் பேச்சு !! 

எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை தில் ராஜா பட விழாவில் கே ராஜன் பேச்சு !! 

GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில்,  இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.    இந்நிகழ்வினில்..   இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும்…
Read More