29
Jan
திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா" பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்.... E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது... இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும்…