திரையில் அசத்திய ‘ப்ளூ ஸ்டார்’ பட ஒளிப்பதிவாளர்  !!

திரையில் அசத்திய ‘ப்ளூ ஸ்டார்’ பட ஒளிப்பதிவாளர் !!

இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் , இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவை மக்களும், ஊடகங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு கதையின் முக்கிய பகுதியாக வந்தாலும், அக்காலக்கட்டத்தில் அம்மக்கள் விளையாடிய தொழில்முறை அற்ற கிரிக்கெட்டை காட்சிப்படுத்திய விதம், அதே சமயம் இரண்டாம் பாதியில் தொழில்முறை கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்திய விதம் என அனைத்தையும் மிக சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். அரக்கோணத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் கதை 1990-களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கதையையும், அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களையும்…
Read More
குணச்சித்திர நடிப்பில் கலக்கும் லிசி ஆண்டனி

குணச்சித்திர நடிப்பில் கலக்கும் லிசி ஆண்டனி

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை என பெயரெடுத்தவர், தொடர்ச்சியாக பல வித்தியாசமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார். தரமணி படத்திலும், பரியேறும் பெருமாள் படத்திலும் இவர் ஏற்ற பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. ஓடிடியில் வெளியான ‘ராங்கி’ படம் இவருக்கு வேறொரு முகம் தந்தது. பெயரே தெரியாமல் இவரை ரசித்துப்பாராட்டியவர்கள் அதிகம். பலர் ஏற்கத் தயங்கும் பாத்திரத்தைக் கூட, மிக…
Read More
“புளூ ஸ்டார்” ஃபேமிலி எண்டர்டெயினர் !!

“புளூ ஸ்டார்” ஃபேமிலி எண்டர்டெயினர் !!

  அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "புளூஸ்டார்" லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் 'புளூஸ்டார்' அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம். இந்தப்படம்…
Read More