‘பயாஸ்கோப்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!

‘பயாஸ்கோப்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்யராஜ்- சேரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படம் ஜனவரி 3 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் 'ஆஹா ஃபைண்ட்' டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமாரும் இணைந்திருக்கிறார். 'பயாஸ்கோப்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும், 'ஆஹா ஃபைண்ட்' டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆஹா டிஜிட்டல் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த், ஆஹா தமிழ் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா…
Read More
சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’ !!

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’ !!

பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'பயாஸ்கோப்' குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், "ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் 'வெங்காயம்' திரைப்படத்தை எப்படி எடுத்தேன், அதில் சந்தித்த சவால்கள் என்ன, அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை…
Read More