09
Sep
‘காதல், தீபாவளி, வழக்கு எண் : 18/9’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் SD.விஜய் மில்டன். இவர் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடுகு’. பரத் – ராஜகுமாரன் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, 2014-ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் இயக்குநர் சமுத்திரக்கனி நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார். அச்சு இசையமைத்து வரும் இதற்கு தீபக் படத்தொகுப்பாளராக…