02
Aug
ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் “அருவாசண்ட “ ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படதின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின் மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பின்னரும் இருவரும் மோதும் சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப் பட்டது. இதனால் படப்பிடிப்பில் பெரும்…