17
Jul
அருள்வான் – பேசப்படாத மக்களின் வலியை பதிவு செய்யும் நேர்மையான முயற்சி… ஆனால் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்! ரேட்டிங்: 3.25/5 ⭐⭐⭐✩☆ இயக்கம்: கணேஷ் விநாயகன் நடிப்பு: அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ், குழந்தை நட்சத்திரம் கிருத்திகா இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிப்பு: சுபா சரவணன் (90 பிக்சர்ஸ்) இயக்குநர் கணேஷ் விநாயகன், ‘தேன்’ படத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்தவர். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தரமான சமூகப் படைப்பாக பலராலும் பாராட்டப்பட்டது. அதே சமூக அக்கறையை இந்த முறை பெரிய நடிகர்களுடன் இன்னும் பரந்த ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக உருவாகியிருக்கிறது ‘அருள்வான்’. தமிழகத்தில் வாழ்ந்தாலும், தனக்கென ஒரு மொழியும் வாழ்க்கை முறையும் கொண்ட மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்காத கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளையும் மையமாக வைத்து இந்தப் படம்…
