“ஏ.ஆர்.எம்” திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

“ஏ.ஆர்.எம்” திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் நவம்பர் 8 முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, "ஏ.ஆர்.எம்" திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ள இப்படத்தை, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில், டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப், சஞ்சு சிவராம், ஹரிஷ் உத்தமன், ரோகினி, ஜெகதீஷ், அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேன்டஸி திரைப்படம், அமானுஷ்யம் சூழ்ந்த சிலையின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின் கதையைச் சொல்கிறது. ஏ.ஆர்.எம் ஒரு விண்கல் மற்றும் ஒரு பழங்கால கோயில் விளக்கைச் சுற்றியுள்ள மர்மங்களை விரிவுபடுத்துகிறது, போர்வீரன் குஞ்சிகேலு, திருடன் மணியன் மற்றும்…
Read More
‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) விமர்சனம் !!

‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) விமர்சனம் !!

டொவினோ தாமஸ் நடிப்பில் 50 வது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) சின்ன சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உயர்ந்து, வித்தியாசமான படங்கள் மூலமாக மக்கள் மனங்களை கவர்ந்த, டொவினோ தாமஸின் ஐம்பதாவது படம் இது. ஐம்பாதவது திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட் , வரலாற்று கதைக்களம் என வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.   பாரம்பரியமாக வீரனாக வாழ்ந்து வந்த பரம்பரை திருட்டு பட்டம் கட்டப்பட்டு வாழ்கிறது. நாயகனை நல்லவன் என்றாலும் கள்வன் என மக்கள் பழிக்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த சிலை ஒன்று களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் நாயகன் அஜயன். அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? அவருக்கும் மூதாதையருக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை. 1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச்…
Read More
ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!

ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!

  மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் "ARM" டிரெய்லரைப் பார்த்து, KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார். ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர் கீழ் அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கிய உள்ளார். "ARM" முழுக்க முழுக்க 3டியில் தயாரிக்கப்பட்டு மலையாள வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் வேகமான ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட "ARM" இன் ட்ரெய்லர் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது, ஒவ்வொரு மொழியிலும் மில்லியன் கணக்கான பார்வைகளைப்…
Read More
டொவினோ தாமஸின் “ARM” படத்தின் ”கிளியே” பாடல் வெளியாகியுள்ளது!

டொவினோ தாமஸின் “ARM” படத்தின் ”கிளியே” பாடல் வெளியாகியுள்ளது!

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். தற்போது அடுத்ததாக "ARM" படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மலையாளத்தில் "கிளியே", தெலுங்கில் "சிலகே", தமிழில் "கிளியே", கன்னடத்தில் "கினியே" மற்றும் இந்தியில் "து ஹை" என்ற பெயர்களில் வெளியாகியுள்ளது. இந்த மெல்லிசை பாடல் ஒவ்வொரு மொழியிலும் அழகான வரிகளைக் கொண்டுள்ளது, அது ரசிகர்களின் மனதில் கேட்டவுடனே இடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் திருச்சூரில் இருந்து 30 பேர் கொண்ட செண்ட மேளம் மற்றும் புடாபெஸ்டில் இருந்து 40 பேர் கொண்ட இசைக்குழு இடம்பெற்றுள்ளனர். இந்த ட்யூன் பலரது இதயங்களையும் கவர்ந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கபில் கபிலன்…
Read More
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

"மின்னல் முரளி" மற்றும் "2018" ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ். அவரின் அடுத்த படமான "ARM" ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார். "ARM" படம் முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள்…
Read More