14
Sep
டொவினோ தாமஸ் நடிப்பில் 50 வது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) சின்ன சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உயர்ந்து, வித்தியாசமான படங்கள் மூலமாக மக்கள் மனங்களை கவர்ந்த, டொவினோ தாமஸின் ஐம்பதாவது படம் இது. ஐம்பாதவது திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட் , வரலாற்று கதைக்களம் என வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். பாரம்பரியமாக வீரனாக வாழ்ந்து வந்த பரம்பரை திருட்டு பட்டம் கட்டப்பட்டு வாழ்கிறது. நாயகனை நல்லவன் என்றாலும் கள்வன் என மக்கள் பழிக்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த சிலை ஒன்று களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் நாயகன் அஜயன். அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? அவருக்கும் மூதாதையருக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை. 1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச்…
