ஆக்சன் கிங் அர்ஜீன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

ஆக்சன் கிங் அர்ஜீன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜீன் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது "மார்டின்" திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில், ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. வசனங்கள் இல்லாத இந்த டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு…
Read More