03
Jul
ஆஹா தயாரிப்பில் வந்திருக்கும் புதிய ஹாரர் தொடர். கொரோனா காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினைகல்யில் நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார். கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படும் நேரமும் இதுதான். அவர் வேலைக்காக அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார். அவர் வீட்டில் பயமுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க தொடங்குகிறது. நிவேதிதா அமானுஷ்ய நடவடிக்கைகளில் சிக்கும்போது கதையில் திருப்பம் எழுகிறது. நிவேதிதாவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதுதான் கதை நிவேதிதா தான் நாயகி ஹாரர் கதையில் வரும் டிபிகல் பாத்திரம் ஆனால் முடிந்தவரை கச்சிதமாக செய்துள்ளார். அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியிருக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது பங்கும் சிறப்பாக உள்ளது. ரெஜினாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் தனித்து தெரிகிறார். ஹாரர் என்பது எப்போதும் போணியாகும் விசயம் அதை உணர்ந்து…