07
Nov
தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் இன்று இப்படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பிண்டி மற்றும் பங்கா திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, படத்தில் அவரது பாத்திரம் குறித்த ஆர்வத்தைத்…