நடிகர் சூர்யாவை தாக்கி அன்புமணி இராமதாஸ் கடிதம் !

நடிகர் சூர்யாவை தாக்கி அன்புமணி இராமதாஸ் கடிதம் !

நடிகர் சூர்யாவுக்கு காட்டமாக கடிதம் எழுதிய அன்புமணி இராமதாஸ் ! சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதமெழுதியுள்ளார். படைப்புச்சுதந்திரம்என்றபெயரில்இன்னொருசமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை; ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடிதத்தின் விவரம்: அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு வணக்கம்! தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சிவக்குமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும்  தமிழ்த் திரையுலகில்…
Read More