இசையமைப்பாளர் இமானை பார்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் -தயாரிப்பாளர் அம்மா T. சிவா

இசையமைப்பாளர் இமானை பார்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் -தயாரிப்பாளர் அம்மா T. சிவா

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர்  கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான்,  கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார்,  T. சிவா, , நடிகர்  ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை,  உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் அம்மா T. சிவா பேசியதாவது… இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா, இயக்குநர் வெங்கடேஷ் அவர்களின் தீவிர ரசிகன். கமர்ஷியலாக நிறைய படங்கள் எடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என பலரை வாழவைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமைய…
Read More