தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை-  தயாரிப்பாளர் கே ராஜன் !!

தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- தயாரிப்பாளர் கே ராஜன் !!

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசியதாவது… சச்சு கிரியேஷன்ஸ் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும், இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள், அனைவருக்கும் நன்றி. சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர் கே அன்பழகன் பேசியதாவது… உண்மையில் அழகாகத் தெளிவான தமிழில், ஒரு டைட்டில் வைத்ததற்கே இந்த குழுவினரை பாராட்ட வேண்டும். தமிழே தெரியாமல் எழுதி வைத்துப் படிக்கிறார் தயாரிப்பாளர். தமிழை நம்பி வந்த…
Read More