ட்ரெண்டிங்கில் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல் !!

ட்ரெண்டிங்கில் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல் !!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார். 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா ''…
Read More
பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் டைரக்ட் செய்யறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கிறாய்ங்க. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருது. இந்த படத்தின் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சில கருத்து வேருபாடுகள் இருந்து வந்ததாக சில வதந்திகளும் வெளியானது,தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் , மேலும் படம் நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்
Read More
விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா! சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.     இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது. விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள். கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார். இந்திரஜா பேசும்போது, சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப…
Read More