27                                    
                                    
                                        Oct                                    
                                
                            
                        
                        
                    
                        தூரிகையால் ஓவியத்தை அழகாக வரைவது என்பது ஒருபக்கம். அப்படி வரையும் ஓவியரே அழகானவராக இருந்தால்...? அப்படியொரு அழகுடன் இருந்ததால், உடனிருந்த ட்ரண்ட்ஸ் ‘நடிகனாகலாமே...’ என்று சீரியஸா சொன்னாய்ங்க. அப்ப ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது கைவந்த கலையாகிபுடுச்சுது. கூடவே, நடிப்பின் மீதும் லப் பத்திக்கிச்சு. முன்னரே கோவையில் இருந்து மெட்ராஸூக்கு வந்தவர், கோடம்பாக்கத்துக்குள் நுழைஞ்சு வாய்ப்புகளைத் தேடினார். ’நம்மைக் காக்கவும் கரம் இருக்கும்; கைதூக்கிவிடும்’ அப்படீன்னு நம்பிக்கை கொண்டிருந்தார். அப்படி நம்பியகரை புகழ்மிக்க ஏவி.எம் நிறுவனம் கைகொடுத்து, கைகுலுக்கி வரவேற்று ‘காக்கும் கரங்கள்’ (1965) படத்தில் அறிமுகப்படுத்திச்சு. அந்தப் படத்தில் நடிக்கும்போது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இன்னிக்கும் இருக்கிறார் என்று பார்த்தவய்ங்க சொல்லிபுடுவாய்ங்க. அதனால்தான் அவரை ‘மார்க்கண்டேயன்’ என்று எல்லோருமே சொல்றாய்ங்க. சிவகுமாரின் 24-வது வயசில் மொத சினிமா வாய்ப்பு கிடைச்சுது. அந்த கா. க.வில் பாத்துப்புட்டு ’அட்டேபையன் ரொம்ப லட்சணமா இருக்கானே...’ -நு சொல்லி அடுத்த ஆண்டே டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்’…                    
                                            
                                    