ரெஜினா கசென்டிரா நடிக்கும்  திரைப்படம் “ப்ளாஷ் பேக்” !

ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” !

தமிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம்’, ‘அரண்மனை-1’ மற்றும் ‘2’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை-28–2-ம் பாகம்’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவர் ரமேஷ் பி.பிள்ளை. இவர் தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக சசி  இயக்கத்தில் சித்தார்த்-ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வெற்றி பெற்றார். தற்போது எழில் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’, ‘தம்பி’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ஒரு மும்மொழிப் படமாக ‘ராம்’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது ‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய டான் சேண்டியின் கதை, திரைக்கதை, வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ரெஜினா கசென்டிரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா,…
Read More