23
Jan
ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’,…