ஆலன் படம் எப்படி இருக்கிறது ?

ஆலன் படம் எப்படி இருக்கிறது ?

புதுமுக இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் எட்டுத்தோட்டாக்கள் புகழ் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் ஆலன். ஆன்மிகமும் காதலும் கலந்த வித்தியாசமான களத்தில் ஒரு கதை. இயக்குநர் நிறைய புத்தகமும் இலக்கிய நாட்டமும் கொண்டிருப்பார் போலும் அதை திரையில் கொண்டுவர ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட்டும், துணை நடிகர்களின் அமெச்சூர் நடிப்பும் படத்தை சராசரி படமாக்கியிருக்கிறது. சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி, தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. இதனால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது அவருக்கு கிடைக்கும் ஒரு வெளிநாட்டு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக…
Read More
படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும்! ஆலன் திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும்! ஆலன் திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். இந்த நிகழ்வில், ஜி. தனஞ்ஜெயன் பேசியதாவது, '' இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற…
Read More
காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !!

காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !!

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன்,   அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.   வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.…
Read More