பத்திரிக்கையாளரை கண்டித்த இயக்குநர் !!

பத்திரிக்கையாளரை கண்டித்த இயக்குநர் !!

பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து காரசாரமாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார் 96 பட இயக்குநர் ச பிரேம் குமார் இதோ அந்த கடிதம் அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், '96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார். குறிப்பாக, '96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை…
Read More
எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் சர்வானந்த். 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தது இவர்தான். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தேதி பல மாதங்களாக அறிவிக்கப்படாததால் திருமணம் நின்றுவிட்டது என்று செய்தி பரவியது. அதை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தேதியை அறிவித்தனர். மேலும் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சர்வானந்த் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் விபத்தில் இருந்து காயம் அடையாமல் தப்பினார். இந்நிலையில் இன்று சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Read More
விஜய்சேதுபதி – திரிஷா  நடிக்கும் ‘96’ டிராவலிங் சம்மந்தப்பட்ட கதை என்பதால் 30 விதமான லொக்கேசன்கள்!

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96’ டிராவலிங் சம்மந்தப்பட்ட கதை என்பதால் 30 விதமான லொக்கேசன்கள்!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற  வெற்றிப் படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். காளி வெங்கட் வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா, எழுத்து, இயக்கம் – சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’  உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால். “இந்தப் படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில்  விஜய் சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட  பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.  ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற…
Read More
விஜய்சேதுபதி  –   திரிஷா  நடிக்கும் ‘96′ பட ஷூட்  இன்று தொடங்கியது!

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96′ பட ஷூட் இன்று தொடங்கியது!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம் இசை - கோவிந்த் மேனன் எடிட்டிங் - கோவிந்தராஜ் கலை - வினோத் ராஜ்குமார் பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயாரிப்பு - எஸ்.நந்தகோபால் இந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர்…
Read More