தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னட, தெலுங்கு பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு. பிரம்மாண்டமான படங்கள் என்றால் அது பந்துலுவால் மட்டுமே முடியும் என்று அளவுக்கு, தான் தயாரித்து இயக்கிய படங்கள் அனைத்தையும் சிறந்த கருத்துச்செறிவும், கலையம்சமும் கொண்ட அரிய படைப்புகளாக அளித்தவர்.ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களாய் இன்றும் சொல்லப்படும் செசில் பி டெமிலியின் "டென் கமாண்ட்மென்ட்ஸ்' வில்லியம் வைலரின் "பென்ஹர்' போல் தமிழில் படங்கள் தயாரிக்கப்படவில்லையே என்ற குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்தவர் பி.ஆர். பந்துலு. பொதுவாக சினிமா இயக்குநர்கள் பலரும் தங்களுக்கு எந்தக் கதையில் சுலபமாக வெற்றி கொடுக்கிறதோ அது தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் சலிப்படையும் வகையில் அதிலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.ஒருவருக்குக் குடும்பக் கதைகளே கைகொடுக்கும், அடுத்தவர் கிராமியப் பாடல்களிலேயே திறமை காட்டுவார். மற்றவர் மசாலாப்படங்களிலேயே வெற்றிகளை குவிப்பார். இன்னொருவர் காதல் கதைகளில்தான் சோபிப்பார். இப்படி ஒருவழிப்பாதையிலேயே வெற்றி காண்பவர்கள் மற்ற புதிய…
Read More