30
Jun
K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை பொருட்செ லவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்.