எம்.ஜி.ஆரின் முதலாளி சின்னப்பா தேவர் பிறந்த நாளின்று!

எம்.ஜி.ஆரின் முதலாளி சின்னப்பா தேவர் பிறந்த நாளின்று!

’’உழைப்பால் உயர்ந்தவர்  சாண்டோ சின்னப்பா தேவர். தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர். யாருக்கெல்லாம் முடியுமோ, யாரெல்லாம் உதவி என்று கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்தவர். எல்லோருக்கும் நம்பிக்கையுடன் நடந்துகொள்வார். மிகவும் நாணயமாக வாழ்ந்தார். இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்’’ என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர். தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தனக்கென, தன் படங்களுக்கென ஒரு பாணியை கட்டமைத்து, திரையுலகில் அழியாப் புகழ் பெற்ற சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கு இன்று பிறந்தநாள். ஆம்.. 1915ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பிறந்த சின்னப்பா தேவருக்கு இன்று 110வது பிறந்தநாள். சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், தமிழ் திரையுலகில் தனது உழைப்பு, தன்னம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியால் அழியாப் புகழ் பெற்ற ஒரு சகாப்தம். ஜூனியர் ஆர்டிஸ்டாகத் தொடங்கி, கோடம்பாக்கத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த அவரது…
Read More