ரோபோட்டிக் ‘காவேரி 3X சென்னை’ திட்டத்தை அறிமுகப்படுத்திய காவேரி மருத்துவமனை !

ரோபோட்டிக் ‘காவேரி 3X சென்னை’ திட்டத்தை அறிமுகப்படுத்திய காவேரி மருத்துவமனை !

சென்னையில் மேம்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், காவேரி மருத்துவமனை குழுமம் 'காவேரி 3X சென்னை' என்ற புதிய ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், சென்னையில் செயல்பட்டு வரும் காவேரி மருத்துவமனையின் மூன்று கிளைகளிலும் ஒரே தரநிலையுடன் நவீன ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் 4-ஆம் தலைமுறை டா வின்சி (Da Vinci) ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை புற்றுநோயியல், சிறுநீரக மற்றும் சிறுநீர்பாதை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் துல்லியமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், புரோஸ்டேட் அறுவை…
Read More