‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

  மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இயக்குநர் பாலா பேசியதாவது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான்…
Read More
தீபாவளிக்கு வெளியாகவுள்ள  ‘ரெய்டு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘ரெய்டு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, "'கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற…
Read More
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

  இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். டங்கி திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!. நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1", ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை,…
Read More
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சீயான் 62’ பட அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சீயான் 62’ பட அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது

  'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. https://www.youtube.com/watch?v=C5JuRbz9ptM 'துருவ நட்சத்திரம்',…
Read More
அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

  அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற பிறகு தமிழ் பார்வையாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் இருப்பதற்கு மற்றொரு காரணத்தை அளித்து, அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது. பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. அனிமல் திரைப்படம் மனித ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மனிதன் ஆதி குணமான விலங்கின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் பிரதான சினிமாவின் வழக்கமான…
Read More
சிவகார்த்தியனின் ’அயலான்’ பட டீசர் வெளியீட்டு விழா!

சிவகார்த்தியனின் ’அயலான்’ பட டீசர் வெளியீட்டு விழா!

  இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இந்தப் படம் ஏலியன் கான்செப்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது, இந்தப் படத்தின்  டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள  சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில், நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. இயக்குநர் ரவிக்குமார், “’அயலான்’ படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம். நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற…
Read More
அனிமல் டீசர் வெளியானது ! சரவெடி அதிரடி விருந்துக்கு தயாராகுங்கள்!

அனிமல் டீசர் வெளியானது ! சரவெடி அதிரடி விருந்துக்கு தயாராகுங்கள்!

  இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒரு சுருக்கமான பார்வையுடன், படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. நட்சத்திர நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘அனிமல்’ என்பது ஒரு புதுமையான அதிரடியான திரை அனுபவம், இது சுவாரஸ்யமும் ஆர்வமும் இணைந்து நீங்கள் நினைத்து பார்த்திராத பயணத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இந்த திரில்லர் டிராமா திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். உங்கள் காலெண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'அனிமல்' திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புதுவிதமான அனுபவத்திற்கு தயாராகுங்கள் ‘அனிமல்’ படத்தை பூஷன்…
Read More
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது!

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது!

  பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல் சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, ​​​​டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. இன்று (செப்டம்பர் 21ஆம் தேதி) வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில் கண்களில் பொறி பறக்க உக்கிரமாக நடப்பதைக் காணலாம். அவர் பீடி புகைக்கும்போது, ​​அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் பைத்தியம் பிடித்து, காட்டு நடனம் ஆடுகிறார்கள். இந்த போஸ்டர் டைகர் நாகேஸ்வர ராவ் மீதான ஆவலை தூண்டுகிறது. இன்று நாம் எந்த மாதிரியான ஆல்பத்தை கேட்கவிருக்கிறோம் என்று இதன் மூலம் யூகிக்கலாம். தி காஷ்மீர் பைல்ஸ்…
Read More
ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

  இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைசிறந்த படைப்பான 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அத்துடன் ரன்பீர் கபூர் நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரையும் படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.‌ இந்த போஸ்டரில் ரன்பீர் கபூரின் தோற்றம்.. போஸ்டராக மட்டுமில்லாமல் ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்தின் தன்மை விவரிப்பதை உறுதியளிக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் சிறப்பாக இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது. 'அனிமல்' என்பது இந்திய திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான பல்துறை ஆளுமையான நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் எழுத்தாளரும், இயக்குநருமான சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான கதை. இந்த பிரம்மாண்டமான முயற்சியின் பின்னணியில் சினிமாவுக்கு இணையாகவும், திறமையான தயாரிப்பாளருமான பூஷன் குமார் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அனில் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி டிம்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள்…
Read More
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (08.09.2023) சென்னையில் நடந்தது.     நடிகை மஹிமா நம்பியார், “என்னுடைய கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும். இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள்…
Read More