30
May
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள படம் ‘வேம்பு’ மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் குமரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து குமரன் கூறும்போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. மருதமலை படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவருடன் மலையாளம், கன்னட மொழிகளில் பணியாற்றி உள்ளேன். கன்னடத்தில் ஒளிப்பதிவாளராக இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில் ஒளிபதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக மாறிய வேலையில்லா பட்டதாரி படத்தில்…
