பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

  ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் வி.எஸ். மதி, “எனக்கு முதல் படத்தை கொடுத்த இயக்குநர் ராமுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி. என் முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில்…
Read More
‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது. படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்" என்றார். நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின் பாலி வில்லனாக நடிப்பது படத்தின்…
Read More
‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை வெளியீட்டு விழா !!

‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை வெளியீட்டு விழா !!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட்…
Read More
ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘ஹார்ட்பீட்’ தீபா !!

ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘ஹார்ட்பீட்’ தீபா !!

கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட்பீட்' வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த 'தேன்மிட்டாய்' சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன் அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். படக்குழு அவரது நடிப்பை பாராட்டி உத்வேகம் கொடுக்க…
Read More
*“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், வரும் ஜூன் 13 முதல் ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!!*

*“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், வரும் ஜூன் 13 முதல் ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!!*

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான "டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும்…
Read More
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ பட  டீஸர் வெளியீடு !!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ பட டீஸர் வெளியீடு !!

'காட் ஆஃப் மாஸஸ்' நந்தமுரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு - ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் - எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் 'அகண்டா 2 : தாண்டவம் ' படத்தின் டீசர் 'பத்மபூஷண் ' பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது. 'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அகண்டா 2 : தாண்டவம்'. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக…
Read More
நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’ !!

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’ !!

  தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ' ப்ரோகோட்- (BroCode)' எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'அனிமல்', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை…
Read More
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது. நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘மெஜந்தா’ திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை ‘இக்லூ’ புகழ் பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை இன்று (ஜூன் 6, 2025) காலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும். தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே.…
Read More
“கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர்!!

“கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர்!!

“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது,  தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக  பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரித்து வருகிறார். முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் இப்படம், அடர்ந்த வனத்திற்குள்,  வாழ்க்கைக்கும் விதிக்குமான போராட்டத்தில் சிக்கியுள்ள ஒருவனின் அசாத்தியமான பயணத்தை விவரிக்கிறது.  தனது தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்ற,  ஆண்டனி வர்கீஸ், “கட்டாளன்”  படத்தில், காட்டுக்குள் வாழும் மனிதனை அச்சு அசலாக  திரையில் கொண்டு வந்துள்ளார். ஆண்டனி வர்கீஸ் உடன்  இணையும் சுனில், புஷ்பா மற்றும் ஜெயிலர் போன்ற, வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஒரு புதுமையான வலிமைமிக்க கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் செய்த பாத்திரங்களைவிட,  முற்றிலும் மாறுபட்ட மற்றும் அதிர்ச்சியளிக்கும் அவரது தோற்றம், ரசிகர்களை மிரள வைக்கும். மார்கோவில் இந்திய திரையுலகிற்கு மிகவும் பயங்கர…
Read More
“சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

“சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில்…
Read More