09
Aug
வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்…
