Atman Cine Arts தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #STR50 !!

Atman Cine Arts தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #STR50 !!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் விருந்தாக அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான Atman Cine Arts நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #STR50 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமாகி 40 வருடங்களைக் கடந்திருக்கும் சிலம்பரசன் TR, பல மாறுபட்ட களங்களில் ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். அவரது பிறந்த நாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக Atman Cine Arts தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில் #STR50 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தை கண்ணும் “கண்ணும் கொள்ளையடித்தால்” புகழ் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் தீப்பந்தத்துடன் இருக்கும் சிலம்பரசன் TR தோற்றம் தற்போது வைரலாக பரவி பெரும் வரவேற்பைப் பெற்று…
Read More
நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட டிரைலர் வெளியானது.!!

நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட டிரைலர் வெளியானது.!!

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதை,திரைக்கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். த்ரில்லர் பாணியில் இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த சீனியர் இயக்குநர்கள் முதல் சமீப காலமாக சின்ன சின்ன படங்களில் கூட தங்களது முத்திரைகளை அழுத்தமாக பதித்து வரும் இளம் இயக்குநர்கள் வரை மொத்தம் 75 பேரும், தமிழ்…
Read More
செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார் அஜித் – ரெஜினா காசண்ட்ரா!

செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார் அஜித் – ரெஜினா காசண்ட்ரா!

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார். தன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றவர் ரெஜினா. இந்தப் படத்திற்காக, இன்னும் கடுமையாக உழைத்திருக்கிறார். “இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது”. அஜர்பைஜான் நாட்டின் கிளைமேட் பற்றி கேட்டபோது, “அஜர்பைஜானில் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தியபோது சரியான நேரத்தில் மாலைக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். மகிழ் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சரியாக…
Read More
“வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

“வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.. Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது... Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்த்தில் நடிகர்…
Read More
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ போஸ்டர் வெளியீடு !!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ போஸ்டர் வெளியீடு !!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. 'பெங்களூர் டேய்ஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ காதல் கண்மணி', 'மகாநடி', 'குரூப்' மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது. 'ஹண்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் 'காந்தா' படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில்…
Read More
ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார் அஜித் – நடிகர் ஆரவ்!

ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார் அஜித் – நடிகர் ஆரவ்!

"அஜித் சார் ரசிகர்கள் அவரிடம் இருந்து எப்பொழுதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்" - நடிகர் ஆரவ்! அஜர்பைஜான் சாலையில் 'விடாமுயற்சி' படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற 'விடாமுயற்சி' படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது. குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, "இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க…
Read More

சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49 !!

சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் TR ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து…
Read More
‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர். புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் புராணங்களின் தனித்துவமான கலவையுடன், மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன், இந்தியாவின் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகிறது. இப்படம் பான் இந்திய அளவில் அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில், மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன், இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். திறமைமிகு முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், மயக்கும் ஒளிப்பதிவு, மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன்,…
Read More
கண்ணப்பா படத்திலிருந்து பிரபாஸின் போஸ்டர் வெளியாகியுள்ளது !!

கண்ணப்பா படத்திலிருந்து பிரபாஸின் போஸ்டர் வெளியாகியுள்ளது !!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், "ருத்ரா" கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் பொங்கி எழும் புயல் என வர்ணிக்கப்படுகிறது, கடந்த கால மற்றும் எதிர்கால காலங்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமானின் கட்டளையால் ஆளப்படும் இப்பாத்திரம் தெய்வீகத்தன்மை மற்றும் வலிமையின் சரியான கலவையாகத் திகழ்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸை மயக்கும் அவதாரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த ஃபர்ஸ்ட்…
Read More
இமானுக்கு இசை வள்ளல் பட்டம் – “பேபி & பேபி” திரைப்பட தயாரிப்பாளர் யுவராஜ் !!

இமானுக்கு இசை வள்ளல் பட்டம் – “பேபி & பேபி” திரைப்பட தயாரிப்பாளர் யுவராஜ் !!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது... எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில்…
Read More