வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்

வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம்  சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் -  மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஹைதராபாத்தில்  பத்திரிகையாளர்கள்  சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன்,…
Read More
லைகா புரொடக்ஷன் சினி ஃபீல்டை விட்டு விலகுதா? ஒரு ஸ்பெஷல்  ரிப்போர்ட்!

லைகா புரொடக்ஷன் சினி ஃபீல்டை விட்டு விலகுதா? ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

பின்னணி: லைகா யார், என்ன? லைகா புரொடக்ஷன்ஸ் - தமிழ் சினிமாவுல பெரிய பெயர். இலங்கையைச் சேர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவோட தலைமையில இந்த நிறுவனம் தமிழ் சினிமாவுல பெரிய பட்ஜெட் படங்களை தயாரிச்சு, பல ஹிட்ஸையும், சில ஃப்ளாப்ஸையும் கொடுத்திருக்கு. பொன்னியின் செல்வன், 2.0, இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சினு பெரிய ஸ்டார்களோட படங்களை எடுத்து, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய பிளேயரா இருந்து வந்துச்சு. ஆனா, இப்போ "லைக்கா சினி துறைய விட்டு விலகுது"னு ஒரு பரபரப்பு சேதி சுத்துது. இதுக்கு பின்னால என்ன இருக்கு? கொஞ்சம் ஆழமா பார்ப்போம். சேதியோட ஆரம்பம் இந்த பேச்சு சமீப காலமா சமூக வலைதளங்கள்லயும், சினிமா வட்டாரங்கள்லயும் பரவ ஆரம்பிச்சது. குறிப்பா, விடாமுயற்சி (அஜித் நடிச்ச படம்), வேட்டையன் (ரஜினி படம்), இந்தியன் 2 (கமல் படம்)னு அடுத்தடுத்து லைக்காவோட படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால, நிறுவனம் நிதி நெருக்கடியில…
Read More
தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை -ஆர்.வி.உதயகுமார்  பேச்சு !!

தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை -ஆர்.வி.உதயகுமார் பேச்சு !!

சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும். இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு…
Read More
“ஓம் காளி ஜெய் காளி’  என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் ” – நடிகை சீமா பிஸ்வாஸ்!

“ஓம் காளி ஜெய் காளி’ என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் ” – நடிகை சீமா பிஸ்வாஸ்!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத் தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே…
Read More
என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம்

என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், 'சீயான்' விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.…
Read More
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட  “எம்புரான்”  பட டிரெய்லர் !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !!

முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. "எம்புரான்" டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில்…
Read More
“எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் வெளியாகிறது !!

“எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் வெளியாகிறது !!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்”…
Read More
‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்ட இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் மற்றும் பிரத்யேக…
Read More
வேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா !!

வேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா !!

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குநர் V. ஜஸ்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள். மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்... தனுஷ் நடித்த…
Read More
‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம்  அறிமுகம் !

‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் அறிமுகம் !

ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந்த லட்சியம் நிறைவேற பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பயணம் விடாமுயற்சி, அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் சிலிர்ப்பூட்டும் கதையாக அமையும். நடிகர் ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, "சரவணன் ஒரு புத்திசாலி. இதுவே அவருடைய பலமும் சுமையும். சரவணன் தனது கனவை அடைய…
Read More