29
Nov
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பிரமாண்டமாக வழங்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தற்போது ராம் சரண் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த ஃபைட் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் என்ற முறையில் கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதராபாத் அலுமினியம் பேக்டரியில், கலை இயக்குநர் அவிநாஷ் கொல்லா அமைத்துள்ள மிகப்பெரிய செட்டில் இந்த ஆக்சன் காட்சிகள் படமாகி…
