கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின். இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் - ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More
‘மறக்குமா நஞ்சம்’  எனும் திரைப்படத்தில் ரக்ஷன் அறிமுக ஹீரோவாக நடிக்கிறார்

‘மறக்குமா நஞ்சம்’ எனும் திரைப்படத்தில் ரக்ஷன் அறிமுக ஹீரோவாக நடிக்கிறார்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே ரக்ஷன். இவர் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.இந்நிலையில் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். ஆம், யோகத்திறன் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் மறக்குமா நஞ்சம் எனும் திரைப்படத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யார் தீனா நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.   https://www.youtube.com/watch?v=TPIdm2t7Bis
Read More
நடிகர் விஷால் ‘சென்னையில் ஒரு கிராம விழா’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நடிகர் விஷால் ‘சென்னையில் ஒரு கிராம விழா’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

  இன்று(05/05/2023) சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சென்னையில் ஒரு கிராம விழா' நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர். அதன்பிறகு பேசிய விஷால், "விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விவசாயி 'சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!' என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன். கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ…
Read More
இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி, விழாவில் பேசினார். "பல யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமீபத்தில் டப்பிங் யூனியனின் அலுவலகக் கட்டடம் மீது மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்குக் காரணம் வெளியாள் அல்ல. யூனியனுக்குள்ளேயே உள்ளவர்களின் துரோகம்தான் காரணம். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என் மாறாத ஆதரவு என்றுமே யூனியனுக்குத்தான். டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் ராதாரவியின் தலைமையில் இறகுப்பந்து போட்டி, சமீபத்தில் சென்னையில் நடந்தது. ஆர்.கே.செல்வமணி, தீனா, இயக்குநர் ரங்கநாதன் உட்படப் பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ராதாரவி மீது விரோதம் இருந்தால் அவருடன் மோத வேண்டும். எத்தனையோ உறுப்பினர்களின் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட அலுவலகத்தைப் பாதிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச் செயல். இடித்துக் கட்டவிருக்கும் யூனியன் அலுவலகக் கட்டடத்தின் செலவிற்கு என் பங்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கிறேன்" என்றும் பேசினார். பரிசு பெற்றவர்களை ராதாரவி,…
Read More
அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; மாவீரன் பிள்ளை படம் பற்றி ராதாரவி பேச்சு தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம் பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற…
Read More
திருக்குறளை மையப்படுத்திய புதிய ஆல்பம் ‘ “தூரிகையின் தீண்டல்’!

திருக்குறளை மையப்படுத்திய புதிய ஆல்பம் ‘ “தூரிகையின் தீண்டல்’!

Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல்  "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது..., "பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது.  இசையமைப்பாளர் அன்பு மணியின், பங்களிப்பு அளப்பரியது.  இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை  மிகச்சரியான படைப்பாக உருவாக்கி இருக்கிறார். இணை தயாரிப்பாளர் பிரியா, எனது இடத்திலிருந்து இந்த பாடலை சிறப்பாக உருவாக்கினார். இந்த பாடலை கேட்டு உங்களுடைய ஆதரவைத் தாருங்கள் நன்றி." ஒளிப்பதிவாளர் விக்ரம்…
Read More
திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி.

திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி.

  தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும்…
Read More
 வானலைகளில் ஒரு வழிப்போக்கன் – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

 வானலைகளில் ஒரு வழிப்போக்கன் – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில், "பிளாக் ஷீப் டிவி" இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தக வெளியீடு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது. அரை நூற்றாண்டு காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீது அய்யாவின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த். மேலும், முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக்‌ஷிப் டிவி நிறுவனம்,  இந்த நிகழ்ச்சியின் தலைமை நல்கையாளராக (Title Sponsorship), பொறுப்பேற்றுக் கொண்டு, தன்னையும் இந்த வரலாற்றுப் பதிவில் இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். முறையே இந்த கான்சர்ட் (concert) மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு…
Read More
புதிய சுவைகளை அறிமுகப்படுத்தும் 601 Multi Cuisine Restaurant

புதிய சுவைகளை அறிமுகப்படுத்தும் 601 Multi Cuisine Restaurant

2002-ஆண்டிலிருந்து , The Park Chennai நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் 601 Multi Cuisine Restaurant புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நாவின் சுவைக்கு சுகமானதொரு சேவை ஆற்றி வருகிறது! இப்போது பிரத்தியேகமான Dim Sum மற்றும் Sushi என புதியதொரு முகவரியை அறிமுகப்படுத்துகிறது. விரைவான மற்றும் இலகுவாக ஜீரணமாகும் மதிய உணவு அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும்-அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு! கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும்! ஆர்வம், துல்லியம் மற்றும் திறமையை மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar மற்றும் அவரது குழுவினர், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒரே மாதிரியாக ஒரு அற்புதமான மெனுவைத் தயாரித்துள்ளனர். மெனுவில் சில பரிச்சயமான சில உணவு வகைகள்…
Read More
சினிமாவிலும் சாதனை புரியும் சிக்னேச்சர் ஸ்டுடியோ

சினிமாவிலும் சாதனை புரியும் சிக்னேச்சர் ஸ்டுடியோ

  சிக்னேச்சர் ஸ்டுடியோ யுனிசெக்ஸ் சலூன் மற்றும் அகாடமி, நாங்கள் முன்னணி அழகு நிலைய வணிகத்தில் இருக்கிறோம். அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களது நீண்ட கால வாடிக்கையாளராக மாற்றிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். எங்கள் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ். நிறுவனர் ஜபீன் மெஹமூத். அவர், ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ளவர். சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கிய ஜபீன், சிறந்த ஒப்பனையாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றவர். சிக்னேச்சர் ஸ்டுடியோவில் அனைத்து வகையான…
Read More