கால் டாக்ஸி பட டீசர் அவுட்!

கால் டாக்ஸி பட டீசர் அவுட்!

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள். இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…
Read More
காதலுக்கு மட்டும் வன்முறை தீர்வா? அலசும் ‘ஐஸ்வர்யா முருகன்’ டீசர் ரிலீஸ்!

காதலுக்கு மட்டும் வன்முறை தீர்வா? அலசும் ‘ஐஸ்வர்யா முருகன்’ டீசர் ரிலீஸ்!

காதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலி நிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த  இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம்தான் 'ஐஸ்வர்யா முருகன்'. இப்படத்தை 'ரேணிகுண்டா' புகழ் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ளனர். அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி., சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா. இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர். இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே 'ரேணிகுண்டா' படத்திற்கு இசையமைத்தவர். படத் தொகுப்பாளர் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம். கலை இயக்கம் - முகமது. சண்டை இயக்கம் - தினேஷ். இவர் சண்டை இயக்குநர்…
Read More